Chapter 13: PHP Sessions

ஒரு global variable போன்று data க்களை சேகரிக்க உதவுகிறது. Cookie போல் அல்லாமல் இந்த session data ஆனது server ல் சேகரிக்கப்பட்டிருக்கும். Browser close செய்துவிட்டால் சர்வர் உடனான இணைப்பு துண்டிக்கப்படும். அவ்வேளையில் session களும் delete ஆகிவிடும்.

1. Starting A Session

Session உருவாக்குவதற்கு start_session function பயன்படுத்தப்படுகிறது. ஒரு php file ல் முதல் வரி இந்த function தான் இடம் பெற வேண்டும். இந்த function முன் வெறு எந்த php அல்லது html code இருக்கக்கூடாது.


<?php 
session_start();
?>

2. Session Array

session_start() function கொடுக்கப்படாமல் session ல் கொடுக்கப்படும் value ஐ பெற முடியாது. Session value ஐ ஒரு php page ல் எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் பெறலாம்.


<?php 
session_start();
$_SESSION["email_id"]="info@phptamil.com";
?>
<!doctype html>
<html> 
<body> 
<?php
echo $_SESSION["email_id"];
?>
</body>
</html> 

ஒரு page ல் session value கொடுத்துவிட்டு மற்றொரு page ல் அதன் value ஐ பெற முடியும்.


<?php 
session_start();
if(isset($_SESSION['email_id'])){
	echo $_SESSION["email_id"];
}
?>
  

3. Deleting A Session

Web browser close செய்யும் வரை session இருக்கும். Default session time ஆனது 24 min. ஆகும் அதாவது mouse அல்லது keyboard ஏதும் உபயோகிக்காமல் இருக்கும் பொது session ஆனது தானாகவே expire ஆகிவிடும். ஒரு session மட்டும் நீக்க unset() function உபயோகிக்கப்படும். அனைத்து session களையும் ஒன்றாக நீக்க அதாவது logout போன்று பயன்படுத்த session_destroy() function பயன்படுத்தப்படும்.


<?php 
session_start();
	unset($_SESSION['email_id'])
	session_destroy();
}
?>