Cookies

Cookie என்பது ஒரு சிறிய அளவிலான file. அவற்றில் சில data -க்களை php மூலமாக பதிவு செய்து user computer களில் பதிவு செய்யப்படும். இவ்வகையான data க்களை browser களில் காணாலாம் ஆனால் அவற்றை படிக்க இயலாது. பெரும்பாலும் இது ஒரு global variable போன்று பயன்படுத்தப்படுகிறது. browser ல் சேகரிக்கப்பட்டிருக்கும் data க்களை அதன் பெயர்கொண்டு எளிதாக பெறலாம். Browser close செய்து பின் ஓபன் செய்தாலும் அந்த வெப்சைட்டில் உருவாக்கிய cookie க்களை மீண்டும் பெற முடியும் அதன் exprie காலம் முடியும் வரை. Browser clear catch மூலம் அனைத்து இணைதளத்தின் cookie களை நீக்கலாம். அதன் பின்பு அவற்றின் பெயர் வைத்து அதன் value க்களை பெற முடியாது.

1. Creating Cookies

ஒரு Cookie உருவாக்குவதற்கு setcookie function பயன்படுத்தப்படுகிறது. இந்த function பயன்படுத்துவதற்கு முன் எந்தஒரு output ம் browser க்கு அனுப்பப்படாமல் இருக்க வேண்டும் அதாவது php file ல் தொடக்கத்திலேயே எழுதப்பட வேண்டும். இவற்றிற்கு மூன்று முக்கியமான parameter கள் கண்டிப்பாக பயன்படுத்தப்படுகிறது. அவையாவன name, value, and expiration date of the cookie, path


<?php 
    setcookie("email_id","info@phptamil.com", time() + (86400 * 30), "/"));
?>

Function Namesetcookie
Cookie Nameemail_id
Cookie Valueinfo@phptamil.com
Expiration Datetime() + (86400 * 30)
Entire website/

2. Cookie Array

Set செய்த cookie ஐ அதன் பெயர் கொண்டு அதனுடைய value ஐ பெறலாம்.

<?php 
	 if(isset($_COOKIE["email_id"])){
     		echo "<h2>".$_COOKIE["email_id"]."</h2>"
     		}
?>

3. Deleting Cookies

ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட cookie களை அதே பெயரில் மீண்டும் உருவாக்குவதன் மூலம் அவைகளை delete செய்யலாம். Value ஐ empty யாக குடுப்பதன் மூலம் அதனை delete செய்துவிடலாம்.

<?php 
      setcookie("email_id","", 0, "/"));
?>
Delele All Cookies

ஒன்றுக்கு மேற்பட்ட cookie களை delete செய்யலாம்.

<?php 
foreach ($_COOKIE as $key => $value)
 {
         setcookie( $key, $value, 0, '/' );
 }
?>