Chapter 6: PHP Conditionals

சரியா தவறா என சோதித்து பார்த்து அதன் பின் சரியாக இருந்தால் இதை செய்! தவறாக இருந்தால் இதை செய்! என எழுதப்படும்.

1. If Statement

கொடுக்கப்படும் TRUE OR FALSE CONDITION பொறுத்து TRUE ஆக இருந்தால் IF க்குள் உள்ள STATEMENT ஐ அடையும். FALSE ஆக இருந்தால் ELSE ஐ அடைந்து அதில் உள்ள STATEMENT ஐ execute செய்யும்.

<?php   

$a = "5";
$b = "6";
if($a > $b){
echo "A is grater than B";
}
else{
echo "B is grater than A";
}

?>
Output
B is grater than A

ஒன்றுக்கும் மேற்பட்ட IF STATEMENT களை எழுதலாம்.

<?php   

$a = 5;
$b = 6;
$c = 2;
if($a > $b){
echo "A is grater than B";
}
else if($c <= $b){
echo "C is less than B";
}
else{
echo "B is grater than A";
}

?>
Output
B is grater than C
  •  IF STATEMENT பொறுத்தவரை ஒரு CONDITION TRUE என்றால் அடுத்த ELSE பர்ட்க்கு செல்லாது.
  •  ஒரு IF STATEMENT ல் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட CONDITION களை பயன்படுத்தலாம்.
<?php   

$a = 5;
$b = 6;
$c = 2;
if($a > $b || $c <= $b){ // 5 >6 அல்லது 2 <=6

}
else if($a > $b && $c <= $b){ // 5 >6 மற்றும் 2 <=6

}

?>

2. Switch Statement

ஒன்றுக்கும் மேற்பட்ட CONDITION களை execute செய்யும்.
<?php   

$a = 5;
switch($a){
	case 1:
    	echo "A value is 1";
        break;
    case 5:
    	echo "A value is 5";
        break;
    default:
		echo "A value is ".$a;
    	
}

?>
Output
A value is 5

BREAK கொடுக்கப்படவில்லை எனில் அதற்க்கு அடுத்த CONDITIONS களையும் சரிபார்க்கும். IF STATEMENT க்கும் SWITCH STATEMENT க்கும் உள்ள வித்தியாசம் இது தான். IF STATEMENT ல் ELSE போல SWITCH STATEMENT ல் DEFAULT உள்ளது.


Mixed Modes

IF CONDITION க்குள் HTML TAGS பயன்படுத்தலாம்.

<?php   

$a = 5;
if($a==4){
?>
<div> <p>A value is 4.</p> </div>
<?php  
} else{
echo '<div> <p>A value is 5.</p> </div>';
}
?>
Output

A value is 5