Chapter 10: PHP Importing Files

ஒரு code ஒன்றுக்கு மேற்ப்பட்ட file-களில் பயன்படுமானால்... அந்த code-ஐ ஒரு தனி PHP அல்லது HTML file-ல் save செய்துவிட்டு அந்த file-ல் உள்ள code எங்கு பயன்படுத்த வேண்டுமோ அந்த இடத்தில் include செய்துகொள்ளலாம். பெரும்பாலும் இவைகள் database, லோகோ, header, footer க்காக பயன்படுத்தப்படும்.

1. Include

சேகரிக்கப்பட்ட ஒரு file-ஐ மற்றொரு file-ல் காண்பிக்க பயன்படுத்தப்படுகிறது.

save file as logo.php

<?php 
	echo '<img src="images/phptamillogo.png">';
?>

save file as importfile.php

<?php 
echo '<h1>Welcome To PHP Tamil<⁄h1>';
include('logo.php');
?>

include ஒரு page-ல் ஒன்றுக்கு மேற்ப்பட்ட இடங்களில் பயன்படுத்தலாம். முழு path-களா கூட கொடுக்கலாம். தற்காலிகமான அவைகள் செயல்படாமலிருக்க comment செய்தும் வைக்கலாம்.

<?php 
include("https://www.phptamil.com/logo.php");
include "https://www.phptamil.com/logo.php";
//include "https://www.phptamil.com/logo.php";
?>

ஒருவேளை include செய்யப்பட file அந்த location-ல் இல்லையெனில் Warning: include() [function.include]: Failed opening 'logo.php' என்ற error காட்டும். அதன்பிறகு அதற்க்கு அடுத்த code ஆனது execute ஆகும்.

2. Require

require என்று குறிப்பிடும்போது கண்டிப்பாக அந்த path-ல் அந்த file இருக்க வேண்டும். இல்லையென்றால் execute நிறுத்தப்படும். அதற்க்கு கீழ் உள்ள எந்த PHP code or html code-ம் செயல்படாது.
<?php 
require("https://www.phptamil.com/logo.php");
 ?>

3. include_once

include போலவே include_once ம் செயல்படும். கூடுதலாக ஒரு விஷயம் என்னவென்றால் ... ஏற்கனவே include செய்யப்பட்டிருந்து மறுமுறை include செய்தால் அந்த code செயல்படாது. ஒரு page ல் இருமுறை வெவ்வேறு இடங்களில் ஒரே file-ஐ include_once செய்திருந்தால் முதலாவதாக include செய்த இடத்தில் மட்டுமே excute ஆகும். ஒரு page ல் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட file ஐ include செய்துகொள்ளலாம்.
<?php 
include_once("https://www.phptamil.com/logo.php");
 ?>

4. require_once

require போலவே require_once ம் செயல்படும். ஒரு file ஐ ஒருமுறை மட்டுமே சேர்க்க முடியும்.
<?php 
require_once("https://www.phptamil.com/logo.php");
 ?>